செந்தமிழ்சிற்பிகள்

இந்திரா பார்த்தசாரதி (1930)

இந்திரா பார்த்தசாரதி (1930 )

 

அறிமுகம்

இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புக்கள் படைத்துள்ளார். சில நாடகங்களும் படைத்துள்ளார். சாகித்திய அகாதமி விருது தவிர தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான் போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.

 கல்வி

இந்திரா பார்த்தசாரதி கும்பகோணத்தில் தன்னுடைய பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் தி. ஜானகிராமனிடம் இவர் பயின்றார்.

 பணி

தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள சங்கர்தாஸ் சுவாமிகள் நாடகப் பள்ளியில் நிகழ்கலைத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

 விருதுகள்

1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்றார். பாரதீய பாஷா பரிஷத், பத்ம ஸ்ரீ விருது (2010), சரஸ்வதி சம்மான்.

 படைப்புகள்

இவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் தீபம், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களில் எழுதிவந்தார். 'மழை' நாடகம் இவர் படைத்த முதல் நாடகம் ஆகும். நிலம் என்னும் நல்லாள் எனும் தலைப்பில் நாவலாக எழுதிப் பின்னர் நண்பர் ஒருவர் நாடகமாக எழுதச்சொன்னதால் நாடகமாக எழுதினார். பிற்காலத்தில் இவர் எழுதிய "நந்தன் கதை", ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

 

நாடக நூல்கள்

மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால எந்திரம், நந்தன் கதை, ஒளரங்கசீப், ராமானுஜர், கொங்கைத்தீ, பசி, கோயில்

இறுதியாட்டம் - சேச்சுபியர் எழுதிய கிங் லியர் நாடகத்தின் தமிழாக்கம்

புயல் - சேச்சுபியர் எழுதிய டெம்பஸ்ட் நாடகத்தின் தமிழாக்கம்

இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் (இரு தொகுப்புகள்)

 புதினங்கள்

ஏசுவின் தோழர்கள், காலவெள்ளம், சத்திய சோதனை, குருதிப்புனல், தந்திர பூமி, சுதந்தர பூமி, வேதபுரத்து வியாபாரிகள், கிருஷ்ணா கிருஷ்ணா, மாயமான் வேட்டை, ஆகாசத்தாமரை, அக்னி தீவுகள், வெந்து தணிந்த காடுகள்

 

விருதுகள்

 

1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

சரஸ்வதி சம்மான்

சாகித்ய அகாதமி (குருதிப்புனல் நூலுக்காக, 1977)

பாரதீய பாஷா பரிஷத்

2010 -- பத்ம ஸ்ரீ விருது.